தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மாடுகளை காப்பாற்ற வேண்டும்"- மிளகாய் அரைத்து வழிபட்ட சிவசேனா..! - சிவசேனா கட்சி

இறைச்சிக்காக மாடுகள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரி சிவசேனா சார்பில் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபாடு நடைபெற்றது,.

சிவசேனா கட்சியினர் மிளகாய் அரைத்து நூதன வழிபாடு செய்தது எதற்கு?
சிவசேனா கட்சியினர் மிளகாய் அரைத்து நூதன வழிபாடு செய்தது எதற்கு?

By

Published : May 23, 2022, 12:09 PM IST

Updated : May 23, 2022, 1:08 PM IST

கோயம்புத்தூர், மாவட்டம் பொள்ளாச்சி (மே22) அருகே ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு தமிழகம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற மாசாணி அம்மனுக்கு மிளகாய் அரைத்து வழிபாடு செய்கின்றனர். இதையடுத்து சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் அக்கட்சியினர் மாசாணியம்மன் கோவிலில் மிளகாயை அரைத்து வழிபாடு செய்தனர்.

பால் வளம் குறையும்: பின் அவர் கூறும்பொழுது பொழுது, மாடுகள் இறைச்சிக்காக தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான லாரி, கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் எதிர் காலத்தில் பால் வளம் வந்து அழிந்து போகும் நிலை ஏற்படும், எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பால் கிடைக்காத சூழல் உருவாகும் அபாயம் ஏற்படும்.

நூதன வழிபாடு:இதுதொடர்பாக ப்ளூ கிராசுக்கு புகார் அளித்துள்ளோம், அரசு அதிகாரிகள் அபராதம் விதித்தாலும் சமூக விரோதிகள் தொடர்ந்து மாடுகளை கடத்துகின்றனர். ஆகையால் கொங்கு நாட்டின் மிகவும் பிரபலமான ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிவசேனா கட்சியின் சார்பில் நூதன முறையில் மிளகாய் அரைத்து வழிபாடு செய்து உள்ளோம் என தெரிவித்தார்.

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் சிவசேனா கட்சியினர் மிளகாய் அரைத்து நூதன வழிபாடு

இதில் கரூர் மாவட்ட தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் பிரகாஷ், கொங்கு மண்டல ஆலோசகர் குணசேகரன், கோவை கோட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சஞ்சீவ், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகநாதன், திருப்பூர் மாநகர செயலாளர் தங்கவேலு, திருப்பூர் மேற்கு மாநகர செயலாளர் விஜயகுமார், கோவை கோட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் தினேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மாநில உரிமை குறித்து திமுக பேசுவது விநோதமானது - திருமுருகன் காந்தி

Last Updated : May 23, 2022, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details