கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் 15 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வருகிறார். இந்நிலையில் கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம் பகுதியில் சிவானந்தம் என்பவர் வீடு கட்ட அஸ்திவாரம் பணியை ஆரம்பித்துள்ளார். அந்த அஸ்திவார இடிபாடுகளுக்குள் 3 அடி வெள்ளை நாகப்பாம்பு விழுந்துள்ளது.
குழிக்குள் விழுந்த வெள்ளை நாகத்தை வனத்திற்குள் விட்டனர்! - கோவை
கோவை: குழிக்குள் விழுந்த வெள்ளை நாகத்தை உயிரோடு பிடித்து அருகில் இருக்கும் வனத்தில் பாதுகாப்பாக விட்டனர்.
white snake
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சஞ்சய்க்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து அங்கு விரைந்து வந்து வெள்ளை நாகப் பாம்பை பிடித்து மதுக்கரை வனப்பகுதியில் அவர் விட்டார். மேலும், ஹார்மோன் மாறி இருப்பதால் நாகப் பாம்பு வெள்ளையாக இருப்பதாக சஞ்சய் தெரிவித்தார்.