கோவை: பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூர் அருகே தனியார் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் எலி மற்றும் பெருக்கான்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் தோட்டத்து உரிமையாளர் அவற்றைப் பிடிக்க கூண்டு ஒன்றை வைத்துள்ளார்.
கூண்டிற்குள் தேங்காய் துண்டு ஒன்று வைத்து தென்னந்தோப்பில் தொல்லை கொடுக்கும் எலி அல்லது பெருக்கான் கூண்டுக்குள் சிக்கும் விதமாக கூண்டை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உணவு தேடி வந்த மரநாய் ஒன்று எதிர்பாராத விதமாக அந்த கூண்டிற்குள் தேங்காய்க்கு ஆசைப்பட்டு சிக்கியது.