தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம்’ - அமைச்சர் வேலுமணி

கோவை: குடியுரிமைச் சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதை அதிமுக அரசு பார்த்துக் கொண்டு இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

we-will-not-be-seeing-if-muslims-are-in-crisis-says-minister-velumani
அமைச்சர் வேலுமணி

By

Published : Dec 25, 2019, 9:56 AM IST

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் கோவையில் மேம்பாலம், சாலைகள், குடிநீர் திட்டங்கள், விமான நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை குறுகிய காலத்தில் செய்துள்ளோம். திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோதுகூட இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் வேலுமணி பேட்டி

இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது, அப்படி வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம். இங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்தியர்கள், தமிழர்கள்தான். இவ்வளவு ஏன் என்கூட இருப்பவர்கள் இஸ்லாமியர்கள்தான், என்னுடைய ஓட்டுநர் இஸ்லாமியர்தான். நாங்கள் அவர்களோடு தாய், தந்தையாக பழகிவருகிறேம். அவர்களை வேற்றுமையாக பார்க்க முடியாது. ஆகையால் இஸ்லாமியர்களுக்கு அப்படி ஒரு பிரச்னை வந்தால் கண்டிப்பாக எந்த காலத்திலும் உறுதுணையாக நிற்போம்’ என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்க: ஜெ., எதிர்த்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு - திமுக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details