கோயம்புத்தூர்:கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணை, அதிவேகமாக நிரம்பி வருகிறது.
நேற்று (ஜூன் 16) இரவு, அணையில் நீர் படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து, நீர் மட்டம் மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடி வரை உயர்ந்தது.
10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படப்பட்டபோது பெருக்கெடுத்த வெள்ளம்... இந்நிலையில் பில்லூர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படப்பட்டுள்ளது. இதனால் அணையின் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இதுகுறித்து பொது மக்களுக்கு சிறுமுகை பேரூராட்சியினர், காவல் துறையினர், பொது மக்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும்; ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ துணி துவைக்கவோ அல்லது மீன் பிடிக்கவோ வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றின் ஓரம் செல்லக்கூடாது எனவும்; குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பவானி ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்: மோடியுடனான சந்திப்பில் என்ன ஸ்பெஷல்?