தமிழ்நாடு வன உயிரின அமைப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் கோவை ஆனைகட்டி சாலையில் உள்ள மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி தமிழ்நாடு வன உயிரின அமைப்பின் தலைவர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் 30க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தடாகம் பகுதி தண்ணீர் பந்தல் முதல் மாங்கரை வரை மலைப்பாதையை ஒட்டியுள்ள சாலையில் வீசப்பட்டிருக்கும் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் காகிதங்களை அகற்றினர். இந்த தூய்மை பணியில் 1000 கிலோ கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அருகில் உள்ள குப்பைக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.