தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் வ.உ.சி நினைவு நாள் அனுசரிப்பு - வ.உ.சி நினைவு நாள் அனுசரிப்பு

கோயம்புத்தூர்: மத்திய சிறையில் உள்ள வ.உ.சியின் நினைவு செக்கிற்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

VOC
VOC

By

Published : Nov 18, 2020, 12:49 PM IST

ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள், நினைவு நாளன்று பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள வ.உ.சி இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

வ.உ.சி நினைவு நாள் அனுசரிப்பு

வ.உ.சிதம்பரனாரின் 84ஆவது நினைவு தினம் இன்று (நவம்பர் 18) அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சிறையில் இருக்கும் வ.உ.சி இழுத்த செக்கிற்கு மரியாதை செலுத்த வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஒரு அமைப்பிற்கு 4 பேர் மட்டும்தான் அனுமதி என்ற கட்டுப்பாடுகளையும் சிறைத்துறையினர் விதித்துள்ளனர்.

இம்முறை கரோனா வைரஸ் தொற்று பரவல என்பதால் மத்திய சிறையில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details