கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம், பெரியபோது ஊராட்சியில் 3,390 மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் வேட்டைக்காரன்புதூர் - ஒடையகுளம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், தினம்தோறும் ஒரு லட்சம் லிட்டரும், காந்தி ஆசிரமம் கிராமத்துக்கு 60 ஆயிரம் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வந்தது. 2017ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தில் இருந்து முறையாக பெரியபோது கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
தண்ணீர் பெற்று தர வலியுறுத்தி கிராம மக்கள் மனு! - village people
கோவை : பேரூராட்சி குடிநீர் திட்டத்தின் கீழ் பெரியபோது கிராமத்துக்கு தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி, கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், பெரியபோது கிராமத்துக்கு குடிநீர் வடிகால் வாரியம் உரிய குடிநீரை வழங்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. இது குறித்து ஊராட்சி நிர்வாகமும், பொதுமக்களும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் முறையிட்டனர். அப்போது," இந்த திட்டம் வேட்டைகாரன்புதூர் - ஒடையகுளம் பேரூராட்சிகளுக்காக கொண்டுவரப்பட்டது. அதனால், அந்த பேரூராட்சிகளுக்கு போக மீதமுள்ள தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்", என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, உரிய குடிநீரை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.