தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலவில் உள்ள ரோவருக்கு என்ன ஆபத்து? - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!

ISROS' Vikram lander and Pragyan rover on moon: நிலவில் உள்ள பிரக்யான் ரோவருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், பூமியைப் போல, நிலவில் விண்கற்கள் விழுவது என்பது சகஜம் எனவும் நிலவில் வாயுக்கள் இல்லாததால் இவ்வாறு விழுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 10:46 PM IST

மயில்சாமி அண்ணாதுரை

கோவை:கோவையில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை இன்று (அக்.23) கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சுதந்திரந்திற்கு பின், 30 ஆக இருந்த மனிதர்களின் ஆயுட்காலம் 72 ஆக அதிகரித்து இருக்கின்றது என்றார். இதயம் எப்படி முக்கியமோ, அதுபோல பல் முக்கியம் எனவும், இருதய அறுவை சிகிச்சை எப்படி பல மாற்றங்களை தாண்டி இருக்கின்றதோ, அதுபோல பல்லின் சிகிச்சையும் பல மாற்றங்களை சந்தித்து இருக்கின்றது என கூறினார்.

விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே அதற்கான ஆயுட்காலம் நிறைவு பெற்றது. பிரக்யான் அலைவரிசை, விக்ரம் அலைவரிசை இரண்டும் இணைந்தால் தான் தகவல் கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் இப்போது பிரக்யான் உயிரோடு இருந்தாலும் செய்தி பரிமாற்றம் இருக்காது எனவும், சந்திராயன்-3 பணி நிறைவடைந்து இருப்பதாகவே நான் பார்க்கின்றேன் என்றார்.

'ரோவருக்கு புதிய ஆபத்து வருகிறதா?' என்ற கேள்விக்கு சந்திரனில் விண்கற்கள் விழுவது என்பது சகஜம் எனவும் பூமியிலும் விழுகின்றன. இங்கு வாயு இருப்பதால் எரிந்து விடுகின்றன எனவும் ஆனால், நிலவில் அவ்வாறு இல்லாததால் விழுகலாம் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என பதிலளித்தார். ககன்யான் திட்டம் அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளது எனவும், இது சிறு அங்கம்தான் என்றார். ககன்யான் கடைசி நொடியில் நிறுத்தப்பட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் செலுத்தப்பட்டது. இது இந்திய விண்வெளி துறையில் சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்த அவர், இதில் பல கட்டங்களை தாண்ட வேண்டும் எனவும், இது முதல் கட்டம் மட்டுமே' என்றார்.

இதையும் படிங்க:குலசையில் இஸ்ரோவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம்.. காரணம், பயன்கள் குறித்த ஓர் அலசல்!

மேலும் பேசிய அவர், 'குலசேகரன்பட்டினம் திட்டத்திற்கு (ISRO's Second rocket launch pads in India) நிலம் கையகப்படுத்த வேண்டும், ஏவுதளம் அமைப்பதை தாண்டி, எரிபொருள் தயாரிப்பது உட்பட பல திட்டங்ளை கொண்டு செயல்பட அது சிக்கனமாக ஏவுதளமாக அமையும். சிறிய ரக செயற்கை கோள்கள்தான் இப்போது அனுப்பபடுகின்றது. தினமும் ஒன்று ரெண்டு அனுப்பும் நிலை வரலாம். அப்போது சிறப்பான இடமாக குலசேகரன்பட்டினம் ஏவுதளம் இருக்கும். அதற்கான கட்டமைப்புகள் வரும் போது பலன் அளிக்கும்' என விளக்கினார்.

'தமிழக அளவில் விஞ்ஞானிகளுக்கு அரசு சார்பில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது உந்து சக்தியாக இருக்கும். சர்வதே விண்வெளி மையத்தில் போட்டி என்பது கூடாது. அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் இயங்க வேண்டும். இதனை இந்தியா வழி நடத்த வேண்டும் எனவும், அப்போதுதான் பிரச்சனைகள் வராது' எனவும் விவரித்தார்.

சர்வதேச விண்வெளி மையம் போட்டி உருவாகக் கூடாத இடமாக இருக்க வேண்டும். விண்வெளி துறையில் இந்தியாவின் முன்னெடுப்புகள் வர்த்தக ரீதியாக பல நாடுகள் இந்தியாவை நோக்கி வரவழைக்கும். நிலவில் மனிதர்களை அனுப்ப அமெரிக்க முயற்சி எடுத்து வருகின்றது. சில வருடங்களில் அது நடக்கும்; இந்தியா நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். ஆயுட்காலம் நிறைவடைத்த பின்பு, விண்கலங்களை திரும்ப கொண்டு வருவது குறித்து இப்போதே ஆலோசிக்கபட்டு வருகின்றது' எனவும் கூறினார்.

விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் என்ன ஆபத்து?: 2023 ஆகஸ்ட் 5-ல் ஸ்ரீஹரிகோட்டாவின் சாராபாய் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இஸ்ரோவின் சந்திரயான் -3 விண்கலன் மற்றும் விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவர் நிலவை ஆராயும் பணியில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, வளிமண்டலத்தில் விக்ரம் லேண்டருக்கும், பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நிலவில் வளிமண்டலம் இல்லாத நிலையில், ஏராளமான விண்கற்களும், பாறைகளும் நிலவின் மீது தினமும் மோதி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதனால், ரோவர் மீதும் லேண்டர் மீதும் இவைகள் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் வீச முயன்ற உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details