கோவை மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “சம்பவம் நடந்தபோது நான் வெளிநாட்டில் இருந்ததால் தற்போதுதான் வந்தேன். அந்தச் சுவரை எடுக்கச் சொல்லி மக்கள் பலமுறை கேட்டபோது, அந்த மக்களை ஜாதி பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியுள்ளனர். அந்தச் சுவரை தீண்டாமைச்சுவர். அதனால் இந்த விவகாரத்தில் கைதானவரை வன்கொடுமை தீண்டாமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.