தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேயிலை விளைச்சலும் இடரும்! - 'தனியார் நிறுவனங்களே உணருங்கள்'

கோவை: கரோனாவின் வீரியத்தைப் புரிந்துகொள்ளாமல் தனியார் நிறுவனங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பணி செய்ய வைப்பது இடருக்கு வழிவகுத்துள்ளது.

தேயிலை விளைச்சலும் இடரும்
தேயிலை விளைச்சலும் இடரும்

By

Published : Apr 10, 2020, 10:59 AM IST

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.

அதன்படி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சில நாள்கள் வீட்டிலேயே இருந்தனர். இதையடுத்து, விவசாய பணிகள் செய்ய தடையில்லை எனவும்,அதனைப் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், கோவை மாவட்டம் வால்பாறையில் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு வர வேண்டும் என்று ஆணையிட்டதோடு, வர தவறும்பட்சத்தில் நடவடிக்கை பாயும் என மிரட்டின.

தேயிலை விளைச்சலும் இடரும்

மேலும், அவர்கள் வழங்கிய வீட்டையும் தொழிலாளர்கள் காலிசெய்ய (தற்காலிகமாக) வேண்டும் எனக் கூறினர். இதற்கு தொழிற்சங்கங்கள் மறைமுகமாக நிர்வாகத்திற்கு சாதகமாகச் செயல்பட்டன. இதனால் அஞ்சிய தொழிலாளர்கள் உடனே பணிக்குச் சென்றனர். அப்படி பணிசெய்ய வந்த தொழிலாளர்களை கரோனா முன்னெச்சரிக்கையை கடைப்பிடிக்க நிர்வாகத்தினர் பணிக்கவில்லை. தற்போது நிலவிவரும் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில்...

  • தொழிலாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பணியாற்ற வேண்டும்.
  • நாள்தோறும் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சோப்பு ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
  • அவர்கள் பணிக்கு வரும்போது கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
  • மேலும், தொழிலாளர்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆனால் தனியார் நிறுவனங்கள் இவற்றையெல்லாம் கிஞ்சித்தும் மதிக்காமல் பொறுப்பற்றத் தன்மையுடன் இருக்கின்றனர். நோய் பரவி அதனால் ஏற்படும் இடருக்கு அந்நிறுவனங்களே முழுப் பொறுப்பு என சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கோவையில் மழையால் வீடுகள் சேதம்!

ABOUT THE AUTHOR

...view details