கோயம்புத்தூரில் உள்ள வால்பாறைப் பகுதியானது முற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு உள்ள பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்ரேஷன் எனும் நிறுவனம் வனத்தை ஒட்டி தேயிலைச் செடிகளைப் பயிரிட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு அந்நிறுவனம் களைக்கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர்.
களைக்கொல்லி மருந்து அடிப்பதால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் - வால்பாறை விலங்குகள் செய்திகள்
கோயம்புத்துார்: வால்பாறை பகுதிகள் முற்றிலும் வனப்பகுதிகளாக காணப்படுகிறது. இங்கு உள்ள வணிக கம்பெனிகள் தேயிலைச் செடிகளைப் பயிரிட்டு களைக்கொல்லி மருந்தை அடிக்கின்றனர். இதனால் இங்கு உள்ள வனவிலங்குகள் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
களைக்கொல்லி மருந்து அடிப்பதால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
அடிக்கும் களைக்கொல்லி மருந்துகள் நீர் நிலைகளில் கலப்பதால் தொற்று நோய்கள் உருவாகி வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வனத்துறைக்கு தெரிந்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வனத்தைப் பாதுகாக்கும் வனத்துறையே இச்செயலை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க:கோயிலுக்குள் மழை நீர் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!