கோவை அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் அதிக கூட்டம் வர தொடங்கியுள்ளது.
கரோனா நோயாளிகளும் அங்கு அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். எனவே மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் இன்று முதல் (ஏப்ரல் 30) கோவை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்படுள்ளது.