திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆ.நடராஜனுக்கு ஆதரவாக திமுக அறக்கட்டளை அறங்காவலர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்த கொளுத்தும் வெயிலில் கூடியிருக்கும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப எல்லோரும் தயாராக இருப்பீர்கள்: மோடியை வீட்டுக்கு அனுப்பத் தயாரா என மக்களைப் பார்த்து கேட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார் என தெரிவித்த அவர், வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவதாக சொன்ன மோடி பணத்தை யாருக்கும் போடவில்லை எனவும் அனைவருக்கும் நாமம்தான் போட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
அதே நாமத்தை அவருக்கு போட வேண்டும் என தெரிவித்தார். மேலும் அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியாக இருப்பதாக கூறிய அவர், இதே எழுச்சியை ஏப்ரல் 18ஆம் தேதி வரை வைத்திருக்க வேண்டும் எனவும் தக்க பாடத்தை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் எனவும் பரப்புரையின்போது அவர் கேட்டுக்கொண்டார்
.