கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூர் குரும்பபாளையத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், கால்நடை மருத்துவர் நாகராஜ் ஏற்பாட்டில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் - Udayanithi Stalin's birthday special medical camp
கோயம்புத்தூர்: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமை கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தொடக்கி வைத்தார். தொடர்ந்து கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், கால்நடை மருத்துவர் நாகராஜ் தலைமையில் அனைத்து கால்நடைகளுக்கும் புற உண்ணி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கருத்தரிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு பரிசோதனை நடைபெற்றது.
இந்த கால்நடை மருத்துவ முகாமுக்கு வந்த அனைத்து கால்நடைகளுக்கும் ஊட்டச் சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக கால்நடைகளை பராமரித்த விவசாயிகளுக்கு பச்சை துண்டு அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கால்நடை மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன.