தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

கோயம்புத்தூர்: பல்வேறு இடங்களில் திருடி வந்த  திருடர்கள் இருவரை, துடியலூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம்

By

Published : Jun 18, 2020, 1:38 AM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து திருட்டுச் சம்பவம் நடப்பதாகவும்; குறிப்பாக கான்கிரீட் போட பயன்படுத்தும் சென்ட்ரிங் சீட்கள் திருட்டு போவதாகவும் காவல் துறையினருக்குப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரின் துடியலூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 17) துடியலூர் பகுதியில், தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர்.

அதில் வண்டி முழுவதும் சென்ட்ரிங் சீட்கள் எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது. லாரியில் வந்த இருவரிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அவர்களின் வாகனத்தைப் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் லாரியை ஓட்டிவந்த காஜாஉசேன், உடனிருந்த ரமேஷ் அந்தோணி ஆகிய இருவரும் கோயம்புத்தூரில் பல இடங்களில் சென்ட்ரிங் சீட்கள் உள்ளிட்ட பொருட்களைத் திருடி விற்றுவந்தது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாது இவர்கள் மீது துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களில் 8 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள சென்ட்ரிங் சீட்கள் உள்ளிட்டப் பொருட்களை காவல் துறையினர் மீட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details