தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலைச் சேர்ந்தவர் வி.எஸ்.கருணாகரன்(55). இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்த பணிகளை செய்து வந்துள்ளார். திமுக செயற்குழு உறுப்பினரான இவர், அனிதா ராதாகிருஷ்ணின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி குலையன்கரிசலில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வழிமறித்த கும்பல் ஒன்று கருணாகரனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொலை வழக்கு: இருவர் சரண் - குற்றவாளி சரண்
கோவை: தூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
saravanan
இதையடுத்து, புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்த நிலையில், பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குலையன்கரிசலைச் சேர்ந்த சரவணன்(27), சக்திவேல்(20) ஆகியோர் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
இதையடுத்து, இவர்களை ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.