தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த இருவர் கைது! - போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

கோவை: கவுண்டம்பளையம் அருகே 13 வயது சிறுமியைக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, தனது நண்பருடன் இணைந்து பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் உள்பட இருவரை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Two arrested for raping 13-year-old girl
Two arrested for raping 13-year-old girl

By

Published : Aug 5, 2020, 9:56 PM IST

கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (23). இவர் அங்குள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல நாள்களாக அவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 4) வெளியில் செல்லலாம் என்று கூறி, கவுண்டபாளையம் அருகேவுள்ள குப்பை கிடங்கு பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த சந்தோஷின் நண்பர் சதீஷ் என்பவரும் இணைந்து, சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 5) அச்சிறுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், சந்தோஷ், அவரது நண்பர் சதீஷ் இருவரையும் கைதுசெய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details