கோவைமாநகரைப் பொறுத்தவரை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கியதால், வாகனப் போக்குவரத்து மேம்பாலத்தின் மேலே மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அதேபோல சாய்பாபா கோயில் சிவானந்தா காலனியை இணைக்கும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியிலும் மழை நீர் தேங்கி, நின்றதில் கல்லூரி வாகனம் ஒன்று சிக்கியது.
பின்னர் மாணவர்கள் இறக்கிவிடப்பட்டு இயந்திரங்கள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதே போல லங்கா கார்னர், கோவை அரசு மருத்துவமனை, 80 அடி சாலை, லட்சுமி மில்ஸ், உக்கடம், போத்தனூர் ஆகியப் பகுதிகளிலும் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.