இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் கட்சி மாநில செயலாளர் கொங்கு ராஜாமணி கூறும்போது,
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
கோவை: விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கட்சியின் மாநில செயலாளர் கொங்கு ராஜாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
‘தமிழ்நாட்டில் சுமார் 375 கிலோ மீட்டர் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை இல்லை என விவசாயிகள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து தற்போது உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், அதேபோல ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் 50 ஆயிரம் வரையிலும் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தார்.