உதகையில், கூடலூரை அடுத்துள்ள புத்தூர் வயல் பகுதியில் ஆடி மாத நடவுக்காக விவசாயிகள் நிலத்தையும் நாற்றுக்கட்டுகளையும் தயார்நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில், காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து நெல் நாற்று கட்டுகளை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது.
நாற்று கட்டுகளை நாசப்படுத்திய யானைகள் ! - farmers
உதகை : நெல் நடவுக்காக வைத்திருந்த நாற்றுக் கட்டுகளை யானைகள் மிதித்து நாசப்படுத்தியதால் 3 ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய முடியாது என விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
நாற்று கட்டுகளை நாசப்படுத்திய யானை கூட்டங்கள் ! விவசாயிகள் வேதனை!
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மூன்று ஏக்கருக்கு நடவு செய்ய வைத்திருந்த நெல் நாற்று கட்டுகள் அனைத்தையும் யானைகள் நாசம் செய்தகாக புலம்பி தீர்த்தனர். பல்லாயிர கணக்கில் செலவு செய்து நெல் நாற்றுக்கள் நடவு பணி செய்யும் சமயத்தில் யானை புகுந்து நெல் நாற்றுக்களை சேதபடுத்தியது, அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.