தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளத்தில் கற்களை வைத்தால் சிறை! ரயில்வே காவல் துறை எச்சரிக்கை - கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்: தண்டவாளத்தில் கற்களோ இரும்புத் துண்டுகளோ வைத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என ரயில்வே காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை வைத்து சென்ற நபர்கள்!

By

Published : Jul 29, 2019, 11:21 AM IST

கோவை மாவட்டம் மின்நகர், ஜோதிநகர், அமைதி நகர், மாக்கினாம்பட்டி ஆகிய பகுதிகள் ரயில்பாதை அருகே அமைந்துள்ளன. இந்த ரயில்பாதை அருகே இரவில் மது அருந்தவரும் சிலர் தண்டவாளத்தில் கற்களை வைத்து செல்வதாக புகார்கள் வந்துள்ளதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ரஞ்சித்குமார், உதவி ஆய்வாளர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் ரயில்வே துறை காவலர்கள் சார்பில் ரயில் பாதை கடந்து செல்லும், மின்நகர், ஜோதிநகர், அமைதி நகர், மாக்கினாம்பட்டி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு
பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

பரப்புரையின்போது, "பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு, மதுரை, திருச்செந்தூர், கோவை உள்பட பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். ரயில் தண்டவாளத்தில் அமர்வது, மது அருந்துவது, சீட்டு ஆடுவது, கைப்பேசியில் பேசியபடி நடப்பது, செல்ஃபி எடுப்பது ஆகிய செயல்களால் ரயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தண்டவாளத்தில் கல், மரக்கட்டை, இரும்புத் துண்டுகள் வைப்பதால் ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை வைத்துச் சென்ற நபர்கள்!

மேலும் இது போன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்" என ரயில்வே காவல் துறையினர் எச்சரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details