தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போடிபாளையத்தில் போலி உரமூட்டைகள் பதுக்கிய கிடங்கிற்கு சீல் - goodown

கோவை: பொள்ளாச்சி அருகே போடிபாளையத்தில் விவசாய தோட்டத்தில்  சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட உரம் தயாரித்துவந்த கிடங்கிற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

உரமூட்டைகள் பதுக்கிய குடோன்

By

Published : Aug 1, 2019, 9:53 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் பகுதியில் தேவராஜ் என்பவர் விவசாய தோட்டத்தில் இயற்கை உரம் எனக்கூறி அரசால் தடைசெய்யப்பட்ட உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்துள்ளார்.

இது குறித்து, கோட்டாட்சியர் ரவிக்குமாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து விரைந்த வட்டாட்சியர் தணிகாசலம் தலைமையிலான வருவாய்த் துறையினர் விவசாய தோட்டத்திலிருந்த குடோனை சோதனை செய்தனர். சோதனையில், கலப்பட உர மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கோழிக் கழிவுகள், கிணற்று மண், மணல், பொட்டாசியம், யூரியா, சாணம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு இயற்கை உரம் என்று அரசு, பிரபல தனியார் உர பைகளை தயாரித்து அதில் கலப்படம் செய்யப்பட்ட உரங்களை நிரப்பி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வருவாய்த் துறையினர் 180 உர மூட்டைகளை பறிமுதல் செய்து உர கிடங்கிற்கு சீல்வைத்தனர்.

உர மூட்டைகள் பதுக்கிய குடோன்

உர மூட்டைகளிலிருந்த மாதிரியை வேளாண் துறை அலுவலர்களிடம் வருவாய்த் துறையினர் வழங்கியுள்ளனர். தொடர்ந்து போலி உரம் தயாரித்து விற்பனை செய்த தேவராஜ் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details