கேரளாவிலிருந்து எடுத்து வரப்படும் மருத்துவக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள் இரவு நேரங்களில் தமிழ்நாடு எல்லைகளிலும், குடியிருப்புப் பகுதிகளின் அருகிலும் கொட்டப்படுவது அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தின் போத்தனூர் பகுதியில் சில வாரங்களாகவே கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவம், நெகிழிக் கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றனர்.
தமிழ்நாடு எல்லைகளில் கழிவுகள்: கேரளாவின் தொடரும் அத்துமீறல் - police
கோவை: மருத்துவக் கழிவுகளையும் நெகிழிக் கழிவுகளையும் தமிழ்நாடு எல்லைகளில் கொட்ட கேரளாவிலிருந்து வந்த இரண்டு லாரிகளை போத்தனூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில், இரவு நேரங்களில் போத்தனூர் காவல் துறையினர் அப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று இரவு கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து மருத்துவக் கழிவுகளையும் நெகிழிக் கழிவுகளையும் ஏற்றுக்கொண்டு பிள்ளையார்புரம் அருகே வந்த இரண்டு லாரிகளை காவல் துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது கழிவுகள் இருந்ததை உறுதி செய்ய காவல் துறையினர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில் ஒட்டுநர்களில் ஒருவர் கர்நாட மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்றும் மற்றொருவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வடிவேல் என்றும் தெரியவந்தது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவுகளை மீண்டும்கேரளாவிற்கே அனுப்பப்பட உள்ளதாகத் தெரிகிறது.