கோவை கொடிசியா வளாகத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் புத்தக திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த புத்தக திருவிழாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள்.
இந்த வருடம் 19ஆம் தேதி தொடங்கவுள்ள இப்புத்தக திருவிழாப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, ‘கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த புத்தக கண்காட்சியில் 150 பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக 250 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள். இளம் புத்தகப் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி. பேச்சுப் போட்டிகள் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
கொடிசியா வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு செல்ல கோவையில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும்’ என்றார்.