தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர்வெப்ப திரவமாக்கல் கலனுக்கு தேசிய காப்பு உரிமை!

Coimbatore Agricultural University: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கிய நீர்வெப்ப திரவமாக்கல் கலனுக்கு தேசிய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Agricultural University
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 4:28 PM IST

கோயம்புத்தூர்:கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நீர்வெப்ப திரவமாக்கல் கலன் வடிவமைப்புக்கு தேசிய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறையின் விஞ்ஞானிகளான முனைவர் ர.திவ்யபாரதி மற்றும் முனைவர் ப.சுப்பிரமணியன் ஆகியோர்களின் மூலம் நீர் வெப்ப திரவமாக்கல் கலனுக்கான தேசிய காப்பு உரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்பு உரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்பு உரிமை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நீர்வெப்ப திரவமாக்கல் அமைப்பானது, கலக்குவான், வெப்பப்படுத்துவான் மற்றும் குளிர்வி ஆகிய பாகங்களைக் கொண்ட உயர் அழுத்தக் கலனாகும். இக் கலனானது, ஈரத்தன்மை அதிகமுள்ள உயிரிக் கழிவுகளிலிருந்து உயிரி எண்ணெய் உற்பத்தி செய்ய உதவுகிறது. நீர்வெப்ப திரவமாக்கல் முறையில் கரி மற்றும் நீர்திரவம் ஆகியவை உபபொருளாக கிடைக்கின்றன.

உயிரி எண்ணெயை நேரடியாக உலைகளில் எரி பொருளாகவும், சுத்திகரித்து வாகனங்களில் எரி பொருளாகவும் பயன்படுத்தலாம். கரியானது, திட உயிரி எரிபொருளாகப் பயன்படுவதுடன் மண் வளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இம்முறையில் பெறப்படும் மற்றொரு உபபொருளான நீர்த்திரவம் இரசாயனங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இதிலுள்ள இரசாயனங்களை தொழிற்சாலைகளில் உகந்த முறைகள் மூலம் பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“எதிர்கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு பாஜக பயப்படுகிறது” - ஐடி ரெய்டு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details