கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் தனது மனைவி தமிழ் செல்வி(26) , மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா (3) ஆகியோருடன் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த திருமண விழாவிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அவிநாசி நெடுஞ்சாலை அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் குடும்பத்தை இழந்து நிற்கதியாக நிற்கும் 3 வயது குழந்தை! - accident
திருப்பூர்: திருமண விழாவிற்கு சென்று விட்டு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் தாய், தந்தை, அண்ணன் என மூவரை இழந்து 3 வயது குழந்தை நிற்கதியாய் நிற்கும் சோகம், அவிநாசியில் நடந்துள்ளது.
இதில் சம்பவ இடத்தில் மகன் ஈஸ்வரன் பலியானார். மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு மாற்றப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ரமேஷ் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 3 வயது குழந்தை நித்திகா உயிர் தப்பினார். ஒரே நேரத்தில் தாய், தந்தை, அண்ணன் என குடும்பத்தை இழந்து 3 வயது பெண் குழந்தை நிற்கதியாக நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.