கோயம்புத்தூர் மசக்காளிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு மூன்று மாத ஆண்குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு நேற்று (பிப்.17) மசக்காளிப்பாளையம் அங்கன்வாடி நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. ஏற்கனவே அக்குழந்தைக்கு சளி இருந்துள்ளது. இந்நிலையில், குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டு மருந்தும் அளிக்கப்பட்டது.
ஊசி போடப்பட்ட இரண்டு மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் பதறிப்போன பெற்றோர் குழந்தையை உப்பிலியப்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தார்.