தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வீடுகளிலும், தமிழகத்தில் திமுக மற்றும் அமமுக நிர்வாகிகளின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பாஜக மிரட்டுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் கோவை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், வருமான வரித்துறை இதனை மேலும் வரிவுபடுத்தி எல்லோருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பணத்தை பதுக்கி வைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் போது மட்டும் சோதனை நடைபெறவில்லை, இதற்கு முன்பும் நடந்துள்ளது" என கருத்து தெரிவித்துள்ளார்.
வருமான வரி சோதனைக்கு கமல் ஆதரவு - it raids
கோவை: நாடு முழுவதும் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கமல்
ஆளும் பாஜக வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும்குற்றம்சாட்டி வரும் சூழலில் கமல்ஹாசன் இதற்கு ஆதரவளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.