தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊறுகாயை மறைத்து வைத்ததால் சிறுவனை அடித்துக் கொன்ற இளைஞர்! - கோவை ஆவாரம்பாளையம்

கோவை: சாப்பிடும் போது ஊறுகாயை மறைத்து வைத்த ஆத்திரத்தால் தன்னுடன் வேலைபார்க்கும் சிறுவனை இளைஞர் ஒருவர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் கொலை இளைஞர் கைது
சிறுவன் கொலை இளைஞர் கைது

By

Published : Sep 8, 2020, 9:19 PM IST

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழில் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பணி செய்து வருகின்றனர். அங்கு பிகார் மாநிலத்தை சேர்ந்த சித்துகுமார்(17) மற்றும் பஜ்ரங்கி குமார்(20) ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

அங்கு பணிபுரிபவர்களுக்கு தங்குவதற்கான இடம் கொடுத்துள்ளனர். அங்கு தங்கியிருந்த சித்து குமார் பஜிரங்கி குமார் ஆகிய இருவருக்கும் அடிக்கடி உணவு சமைப்பதில் சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று பஜ்ரங்கிகுமார் உணவு சாப்பிடும்போது சமைத்த குழம்பு பற்றாமல் இருந்துள்ளது. அதனால் சித்து குமாரிடம் ஊறுகாய் பாட்டில் எங்கே என கேட்டுள்ளார். ஆனால் ஊறுகாய் பாட்டிலை மறைத்து வைத்துவிட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இருவருக்குமிடையே இந்த சண்டை கைகலப்பாக மாறியுள்ளது, அப்போது ஊறுகாய் தராத கோபத்தினால் பஜ்ரங்கிகுமார் சித்துகுமாரை பிடித்து தாக்கியுள்ளார்.

அப்போது கழுத்தை பிடித்து நெருக்கியதாகவும், மார்பில் மற்றும் அடிவயிற்றிலும் அடித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சித்து குமார் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

அதன்பின்னர் அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து பஜ்ரங்கி குமாரை சிறையிலடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details