தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோரையாற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் - பொள்ளாச்சி ஜெயராமன் - blockade dams

கோவை: மழை காலங்களில் அரபிக் கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்க கோரையாற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டப்படும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்

By

Published : Jun 18, 2019, 8:37 AM IST

இது குறித்து அவர் செய்தியாள்களிடம் கூறுகையில், 'மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மண்ணூர் சேர்வைக்காரன் புதூரில் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனையடுத்து சென்ற ஆண்டு ரூ. 2 கோடி செலவில் கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து தடுப்பணை தயாராகவுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

அதேபோல் மழைக்காலங்களில் அரபிக்கடலில் போய் சேரும் தண்ணீரை சேமிக்கும் வகையில் கோரையாற்றின் குறுக்கே கூடுதலாக ஆறு தடுப்பணைகள் கட்டப்படும். இதனால் அதிகளவில் தண்ணீர் சேமிக்கப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் இந்த நீர் பயன்படுத்தப்படும்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details