கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திலிருந்து இரண்டு காட்டு யானைகள் முட்டத்து வயல் பகுதியில் உள்ள குளத்தில் இறங்கின. இந்த யானைகள் தாணிகண்டி என்னும் பழங்குடியினர் குடியிருப்பு வழியாக இந்தக் குளத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினர் யானைகளைக் கண்காணித்தனர். அதனைத் தொடர்ந்து வனத் துறை பணியாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து குளத்தைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். குளத்திலிருந்து யானைகளை வெளியேற்றவும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்.