பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனை முகநூலில் கோவையை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில் ’’கோவையை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து பதிவிட்டு உள்ளார். அதனை பலருக்கும் பகிர்ந்து உள்ளார். இந்த செயல் பாஜக தொண்டர்கள் இடையேயும் மன வேதனை அளிக்கிறது. இது போன்ற பதிவுகளை பதிவிட்ட அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு - பாஜகவினர் புகார்
கோயம்புத்தூர்: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக பாஜகவினர் இன்று (ஜூன் 11) கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு - பாஜகவினர் புகார்
அதேபோல், கோவையை சேர்ந்த கீதா என்பவர் அவரது யூடியூப் சேனலில் பாஜக கட்சியின் மீதும் வானதி சீனிவாசன் மீதும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவுகளை பதிவு செய்து வருகிறார். எனவே, இருவரின் பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்குமாறும், இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.