ஆடி 18 விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் படித்துறையில் புது மண தம்பதிகளும், பக்தர்களும் புனித நீராடி வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு வழிபாடு செய்தனர்.
ஆடிப்பெருக்கு: தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்ட பக்தர்கள்! - தண்ணீர் வசதி
கோவை: பேரூரில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையிலிட்டு காெண்டாடினர்.
devotee
மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் பேரூர் வந்திருந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் தண்ணீர் வசதிகள் இல்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.