கோயம்புத்தூர்:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு - தமிழகம் தொடர்பாக பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (ஜன.9) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரை நிகழ்த்திய ஆளுநர், திராவிடம், அம்பேத்கர் போன்ற சொற்கள் அடங்கிய பத்தியை வாசிக்காதது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இரு இடங்களில் ஆளுநரின் உருவப்படம் மற்றும் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த தபெதிக அமைப்பு செயலாளர் ஆறுசாமி, “பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. தற்போது ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதற்கு கூட தயங்குகிறார்.