தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் அழைத்து வரப்படுகின்றன.
பிப்.8ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை இந்த முகாம் நடைபெறுகிறது. லாரிகள் மூலம் அழைத்து வரப்படும் யானைகள் அனைத்திற்கும் எடை, வயது, உயரம் ஆகியவை பார்க்கப்பட்டு அதன்பின் அனுமதிக்கப்படுகின்றன. 48 நாள்கள் நடைபெறும் இந்த முகாமில் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். எடை அதிகமாக உள்ள யானைகளுக்கு நடைபயிற்சியும், எடை குறைவாக உள்ள யானைகளுக்கு அதற்கேற்றவாறு உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.