தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெலங்கானாவிலும் என்னை சகோதரி என்று அழைக்கிறார்கள்- தமிழிசை நெகிழ்ச்சி - தமிழிசை சௌந்தரராஜன்

கோவை: தன்னை ஆளுநர் என்று அழைப்பதைவிட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புவதாகவும் தெலங்கானாவிலும் தன்னை சகோதரி என்று அழைப்பதாகவும் அம்மாநில ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தமிழிசை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan

By

Published : Oct 19, 2019, 4:09 PM IST

கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவன தின விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழிசை, "நான் தமிழ்நாட்டிற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்னை சகோதரி என்று அழைத்தது போலத்தான் தெலங்கானாவிலும் என்னை அக்கா என்று அழைக்கிறார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தெலங்கானா மக்கள் என்னை அக்கா என்றழைக்கிறார்கள்- தமிழிசை

மேலும் பேசுகையில், மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அன்பின் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தையும் இன்றைய இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். தனது உயரத்தை நிறத்தை முடியை கிண்டல் செய்தார்கள் என கவலையுடன் சொன்ன அவர், இன்று தன்னை கிண்டல் செய்தவர்களை தான் மேடையிலிருந்து கிண்டல் செய்கிறேன் எனத் தெரிவித்தார். எனவே தடைகளைத்தாண்டி குறிக்கோள் நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:'நில அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே?' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details