கரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் காவல்துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் பணியாற்றினர்.
கரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு கண்ணீர் அஞ்சலி - உயிரிழந்த பத்திரிக்கையாளர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
கோயம்புத்தூர்: கரோனா பேரிடர் காலத்தில் கரோனா தொற்றாலும், விபத்துகளாலும் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கண்ணீர் அஞ்சலி
கரோனா பேரிடர் காலத்திலும் தங்களின் பணிகளை மேற்கொண்டு பல ஊடகவியலாளர்களும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஓரிரு ஊடக நண்பர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை மாவட்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் இணைந்து கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.