கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ரூபன் என்பவர், அதே எஸ்டேடில் தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி அதே எஸ்டேட்டில் வசிக்கும் 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ரூபன் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேயிலை தோட்டத்து தொழிலாளி கைது! - போக்சோ சட்டத்தில் கைது
கோவை: பொள்ளாச்சி அடுத்த வால்பாறை பகுதியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தேயிலை தோட்டத்து தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இது குறித்து பாதிக்கபட்ட அந்த சிறுமி பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரூபன் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ரூபனை இன்று காலை கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின், அவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.