கோவையில் மது வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள் காலை 9 மணியில் இருந்தே டோக்கன் வாங்கிக் கொண்டு நீண்ட வரிசையில் நின்றனர். மேலும் காவல் துறையினர் தகுந்த இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைத்து மது வாங்கிச் செல்வதற்கு அறிவுறுத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுட்டெரிக்கும் வெயிலில் மது பிரியர்களுக்கு கலைப்பு தெரியாமல் இருப்பதற்காக இசையுடன் தகுந்த இடைவெளிவிட்டு மதுபாட்டில்கள் வழங்கப்பட்டன. மேலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.