தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமாகா வலுவான கூட்டணியில் உள்ளது - ஜி.கே. வாசன் - பொள்ளாச்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணியில் உள்ளதாக பொள்ளாச்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharatதமாகா வலுவான கூட்டணியில் உள்ளது - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன்
Etv Bharatதமாகா வலுவான கூட்டணியில் உள்ளது - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன்

By

Published : Jan 10, 2023, 11:03 AM IST

தமாகா வலுவான கூட்டணியில் உள்ளது - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன்

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள ஜக்கார் பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் இன்று (ஜன.10) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்றார். அவருக்கு நெகமம் அருகே பல்லடம் சாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் அங்கிருந்து மாட்டு வண்டியில் அமர்ந்து ஜக்கார்பாளையம் சென்றார். அங்கு சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘ஆளுநர் அரசினுடைய நிலைப்பாட்டை படித்தார். ஆளும் கட்சியினுடைய எதிர்பார்ப்பை ஆளுநர் பிரதிபலிக்க தேவையில்லை என்பது என்னுடைய கருத்து.

அதனை தெளிவுபடுத்தும் வகையில் ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் ஆளுநர் உரையிலேயே இல்லை என்பது பொது மக்களுக்கு ஏமாற்றமே. ஆளுநரை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அவருடைய கருத்தை அவர்கள் பொதுவாக வெளிப்படுத்தினார்களே தவிர அவர் யாருக்கும் எதற்கும் அழுத்தமும் கொடுக்கவில்லை, கோரிக்கையும் வைக்கவில்லை.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தவும் இல்லை. அப்படி யாராவது தங்களுடைய கருத்தை வலியுறுத்தினாலும் கூட அரசுக்கு வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டியது அரசாங்கம் கையில் இருக்கிறது. அதிகாரமும் அவர்களிடம் தான் இருக்கிறது. எனவே இதுபோன்ற சாதாரணமான புரிதல் இல்லாமல் சில விஷயங்களை அரசியல் ஆக்க வேண்டாம். தனிமனித காழ்ப்புணர்ச்சியும் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலிலே தமாகா ஒரு வலுவான கூட்டணியில்தான் இருந்தது. மீண்டும் அது வலுவான கூட்டணியில் வெல்லக்கூடிய நிலைமையிலே மக்களை சந்தித்து போட்டியிட்டு வெல்லும். எங்களது கூட்டணி கட்சிகளுடைய தலைவருடைய செயல்பாடு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயல்பாடாக அமைந்திருக்கிறது. அரசாங்கத்துடைய தவறுகளை சுட்டிக்காட்டக்கூடிய நிலையிலே நாங்கள் உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதன் அடிப்படையிலே தமிழ்நாட்டிலே திமுகவுக்கு எதிர்மறை ஓட்டு கூடிக் கொண்டிருக்கிறது. ஈரோட்டில் வர வேண்டிய இடைத்தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தவுடன் எங்களுடைய கூட்டணி தலைவர்கள் ஒத்த கருத்தோடு பேசி ஒரு முடிவை அறிவிப்பார்கள். ஏற்கனவே தமாக போட்டியிட்ட தொகுதி இருப்பினும் உரிய நேரத்திலே சரியான அறிவிப்பினை கூட்டணி மூலம் வெளிப்படுத்துவோம். சட்டமன்ற தேர்தலுக்கு நிறைய நாட்கள் இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது இந்த கூட்டணி மேலும் வலுப்பெறும் வெற்றி பெறக்கூடிய பிரகாசமான வாய்ப்பு வருகின்ற வருடங்களிலே மிக அதிக அளவில் இருக்கும் அதற்கு எடுத்துக்காட்டாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றார்.

இதையும் படிங்க:வீடியோ: வார்டு கவுன்சிலரை தலையில் தட்டிய அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details