தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேச்சு: தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு - Talk to lowly people against Dayanidhi Maran DMK

கோயம்புத்தூர் : பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக திமுக எம்பி தயாநிதி மாறன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மீது வழக்கு
தயாநிதி மாறன் மீது வழக்கு

By

Published : May 20, 2020, 1:33 PM IST

திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் மே மாதம் 13ஆம் தேதி தலைமைச் செயலாளரை சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்கள் என்ன பட்டியலின மக்கள் போன்ற மூன்றாம் தர குடிமக்களா, எங்களுக்கு தலைமைச் செயலாளர் உரிய மரியாதை தர வில்லை,” எனக்கூறி ஆவேசமாக பேசினார். அதேபோன்று திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி உள்ளார்.

இந்த ஆவேச பேச்சு பட்டியலின மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் சிஎம்சி காலனியைச் சேர்ந்த ஜெகநாதன், சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள அர்ஜூனா காலனியைச் சேர்ந்த ரங்கராஜ், துடியலூர் அனுமன் சேனா சேகர் உள்ளிட்டோர் தயாநிதி மாறன், ஆர்.எஸ். பாரதி மீது புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் கோவையில் நான்கு இடங்களில் தயாநிதி மாறன், ஆர்.எஸ். பாரதி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அவர் ஒரு படித்த முட்டாள்' - அனல் வார்த்தைகளைக் கக்கும் செந்தில் பாலாஜி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details