கோவை சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, திமுக தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "இந்த தேர்தல் முக்கியமான காலக்கட்டத்தில் நடைபெறுகிறது. நான்கு தொகுதிகளில் நடைபெறும் இந்த இடைத் தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் - சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி! - candidate
கோவை: திமுக போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது மூன்று எம்.எல்.ஏக்களுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக கொறடா சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இதிலிருந்து 18 இடங்களிலும் திமுக அணி வெற்றி பெறும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதனால் அதிமுக ஆட்சி கவிழ்வது நிச்சயம். ஆகையால் ஆளுங்கட்சியில் உள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் விசைத்தறிகள் பல்வேறு பிரச்னைகளால் அழிந்து வருகிறது. அதனை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் தொடங்க இருக்கிறார் என்பது ஒரு பொய்யான வாக்குறுதி. சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழப்பி மர்மம் இருப்பதாக வாட்ஸ் அப்பில் வீடியோ பரவி வருகிறது. அது இயற்கை மரணம் இல்லை செயற்கை மரணம் என்ற சந்தேகம் எழுகிறது. நான் வெற்றி பெற்றால் முன்னாள் எம்.எல்.ஏ கனகராஜின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை வந்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.