கோவை மத்திய சிறையில் பிரகாஷ்(57) என்ற கைதி நேற்று தனக்கு கிடைத்த கண்ணாடித் துண்டுகளை உண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தகவலறிந்து வந்த சிறைத்துறையினர், அவரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததையடுத்து நேற்று மாலையே சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.
கண்ணாடித் துண்டுகளை உண்டு தற்கொலைக்கு முயன்ற சிறைக்கைதி! - Central Jail
கோவை: மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் கண்ணாடித் துகள்களை உண்டு தற்கொலைக்கு முயன்றதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முயற்சித்தவர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள சேக்கிழார் வீதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் ஆவார். இவர் மார்ச் மாதம் 23ஆம் தேதி 294(b), 506(1), பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். இந்நிலையில், சிறைவாசிக்கு எப்படி கண்ணாடி துகள்கள் கிடைத்தது என சிறைத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மத்திய சிறையிலும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் விஜிலன்ஸ் காவலர் செயல்படுவர். ஆனால், கோவை மத்திய சிறையில் தற்போது விஜிலன்ஸ் காவலர் இல்லை எனவும், சிறை வார்டன்கள்தான் தற்போது அந்தப் பணியைப் பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறைக்குள் நடைபெறும் சம்பவங்கள் எதுவும் அரசின் கவனத்திற்கு அல்லது பொதுவெளிக்கு வராமல் மறைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.