ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழாவில் ரயில்வே காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
இலக்கை நோக்கிச் செல்லும்போதுதான் வெற்றிபெற முடியும்: சைலேந்திர பாபு ஐபிஎஸ் - காவல்துறை
கோவை: மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கிச் செல்லும்போதுதான் வெற்றிபெற முடியும் என்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ரயில்வே காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு கூறினார்.
கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
பின்னர் சைலேந்திர பாபு பேசியதாவது, மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பின்போது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கிச் செல்லும்போதுதான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்று ஊக்குவித்துப் பேசினார். நிகழ்வின்போது சைலேந்திர பாபு மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டு அதில் சிறப்பாக பதிலளித்தவர்களுக்கு பரிசும் வழங்கினார்.