தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியர் தேர்வு எழுதவந்த மாணவர் தற்கொலை! - Student came to write Arrear exam

கோவை: தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு அரியர் தேர்வை எழுதவந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Student
Student

By

Published : Nov 20, 2020, 6:21 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (22). கோவை ஒத்தக்கல்மண்டபம் அருகே உள்ள பிரிமியர் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் கற்பகம் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

கரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடந்து வரும் நிலையில், நவீன்குமார் இரண்டாம் ஆண்டில் வைத்த அரியர் தேர்வை எழுத கடந்த 5 நாள்களுக்கு முன் தனது தாயுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.

நவீன்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மூன்று நாள்கள் நவீனுடன் அவரது தாயார் தங்கி விட்டு நேற்று(நவ-19) தனது சொந்த ஊருக்கு சென்றார்.

அதைத்தொடர்ந்து மாலை நவீன் செல்போனுக்கு அவரது தாயர் அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும், போனை எடுக்காத்தால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியருக்கு தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது நவீர்குமார் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் செட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குக்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details