கோவை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு படை ஐ.ஜி ஸ்ரீ பிரேந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'கோவை ரயில் நிலையம் மற்றும் வெளி வட்டங்களிலுள்ள ரயில் நிலையம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் புத்தாண்டையொட்டி பாதுகாப்பிற்காக சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டத்தில் 335 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் மட்டும் அறுபது ரயில்வே பாதுகாப்பு படையினர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரயில் நிலையங்களில் குற்றங்கள் குறைந்துள்ளது. மேலும் ரயில் மீது கற்கள் எறிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.