கோவையில் காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் "முருக கடவுளுக்கு ஏராளமான பாடல்களை ஆன்மிகவாதிகள் எழுதியிருக்கின்றனர். கவசம் என்பது முருகப்பெருமானுக்கு மட்டுமல்ல எல்லா தெய்வங்களுக்கும் பாடப்பட்டுள்ளது.
அதனை அறுவறுக்க தக்க பாடல் என யூடியூப் காணொலியில் ஒருவர் சொல்வது அநியாயமானது. அதை தட்டிக்கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில், காவி கொடியுடன் சில இயக்கங்கள் மட்டுமே போராடி வருகின்றன. இதுபோன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கு கூட பயப்பட தேவையில்லை.