கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை ஸ்டாலினும், டி.டி.வி தினகரனும் அகற்ற முயற்சித்து வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. இருவரும் மறைமுகமாக சந்தித்து பேசிவருகிறார்கள். இதற்கு ஸ்டாலின் மருமகன் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார்" என்றார்.
‘டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஸ்டாலின்’ - அதிமுக கோவை செல்வராஜ்!
கோவை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவிற்கு எதிராக மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பினால் திமுக ஏன் பதட்டம் அடைகிறது என கேள்வி எழுப்பிய அவர், தினகரனுக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுவதாகவும், செந்தில் பாலாஜியை தினகரன் தான் திமுகவுக்கு அனுப்பி வைத்தார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும் அமமுக ஒரு கம்பெனி எனவும் தேர்தல் காரணத்தினால் தான் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டால் தமீமுன் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது 30 திமுக எம்எல்ஏக்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்" எனவும் கூறினார்.