கோவை புறநகர் தெற்கு மாவட்டம் குள்ளாக்காபாளையம் ஊராட்சி சடையகவுண்டன் புதூர்யில் மாநில நெசவாளர் அணி சார்பில், மாநில நெசவாளர் அணி மாநிலசெயலாளர் கே.எம். நாகராஜன் தலைமையில் கழகத் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் சேலைகள், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்டவைகளை கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் வழங்கினார்.